திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக மதிமுக அறிவித்துள்ளது. சென்னை அண்ணா நகரில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே தவெகவுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக 4 இடங்களில் போட்டியிட்டு, 2 இடங்களில் வென்றது.